Advertisement

தாய்லாந்து நாட்டில் ஐந்தாவது முய்தாய் கிக் பாக்ஸிங் உலக சாம்பியன்ஷிப் போட்டி

தாய்லாந்து நாட்டில் ஐந்தாவது முய்தாய் கிக் பாக்ஸிங் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது, இதில் இந்தியா,அமெரிக்கா,இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்த 1500 வீராங்கனைகள் கலந்து கொண்டனர் இதில் இந்தியா சார்பாக 15 நபர்கள் கலந்து கொண்டோம்,

இந்தியா சார்பாக தமிழகத்திலிருந்து ஐந்து வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு நான்கு தங்க பதக்கமும்,ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்,இதையடுத்து பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகள் விமான மூலம் சென்னை திரும்பினர்,

சென்னை விமான நிலையத்தில் கராத்தே அசோசியேஷன் சார்பாகவும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சார்பாகவும் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்,இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தங்கப் பதக்கம் வென்ற கோபி கூறுகையில்,

தாய்லாந்தில் நடைபெற்ற ஐந்தாவது முய்தாய் கிக் பாக்ஸிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அனைத்து போட்டிகளிலும் வென்று இந்தியா சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த நாங்கள் ஐந்து பேரும் நான்கு தங்கப்பதக்கம் ஒரு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளோம் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது,

அடுத்து ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் இதற்கு தமிழ்நாடு அரசு உதவியும் ஊக்கமும் அளிக்க வேண்டும்,

இதுவரை நாங்கள் விளையாட அனைத்து போட்டிகளுக்கும் எங்களது பெற்றோர்களும் பயிற்சியாளர் சார்பில் மட்டுமே உதவி செய்துள்ளனர் இனிவரும் காலங்களில் அரசு உதவி செய்ய வேண்டும் இவ்வாறு கூறினார்,தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை அபர்னா கூறுகையில்,

நான் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறேன் கடந்த ஐந்து வருடங்களாக கிக் பாக்ஸிங் பயிற்சி எடுத்து வருகிறேன், நான் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கலந்து கொண்டு விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் தங்க பதக்கம் வென்று உள்ளேன்,

தமிழ்நாடு அரசு எங்களுக்கு விளையாடுவதற்கு மைதானமும் நாங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவியும் ஊக்கமும் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம், இதன் மூலம் ஒலிம்பிக் போன்ற போட்டிகளிலும் பங்கேற்று நாட்டுக்காக தங்கப் பதக்கங்கள் வெல்ல முடியும் இவ்வாறு கூறினார்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *