மார்ச் -18 கண்டமங்கலம் அருகே பங்கூர் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட்) சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
தொழிற்சங்க தலைவர் மணிபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரச்சார கூட்டத்தில் விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பங்கூர் கிராமத்தின் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் சிரமம் இன்றி பாதுகாப்பாக சாலையை கடந்து செல்ல மேம்பாலம் அமைத்து கொடுத்திடவும் பங்கூர் மாரியம்மன் கோவில் நிலத்தை அளவீடுசெய்து மீட்டு எடுத்திட வேண்டும். பங்கூர் கிராமத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மேலும் இந்த கிராமத்தில் உள்ள மூன்று உயர் கோபுர மின்விளக்குகளை சரி செய்து இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன் மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் இடை கமிட்டி தோழர்கள் செங்குலத்தான் இன்னரசு ராமமூர்த்தி மங்கலக்ஷ்மி சுரேந்தர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.