தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் பனகல் கட்டிடம் எதிரே தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கொட்டும் மழையில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில மையம் சார்பில் சங்கத்தின் மாநிலத்தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில் பனகல் கட்டிடம் எதிரே
ஒருநாள் மாநில அளவில் தற்செயல் விடுப்பு மற்றும் மாவட்ட தலைநகரங்களில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முறையான காலமுறை ஊதியம் பெற்றுவரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலருக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும். என்ற கோரிக்கை வலியுறுத்தி அனைத்து ஊராட்சி செயலாளர்களும் கோசங்களை எழுப்பி கொட்டும் மழையில் நனைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.