மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரம் முன்பு தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைத்து ஊராட்சி பதிவறை எழுத்தாளர்களுக்கான சலுகைகளை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சங்கத்தின் மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில இணை செயலாளர் சாக்ரடீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.

ஊராட்சியில் முறையான காலமுறை ஊதியம் பெற்றுவரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலருக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஊராட்சி செயலர்கள் 50-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏப்ரல் 4-ஆம் தேதி சென்னை ஊரக வளர்ச்சித் துறை ஆணையரகத்தில் பெருந்திரள் முறையீடும், ஏப்ரல் 21-ஆம் தேதிமுதல் சென்னை ஊரக வளர்ச்சித்துறை ஆணையரகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Share this to your Friends