அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

மேலும் இந்தப் பிரதோஷம் என்பது மற்ற தினங்களை விட சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்புடையதாக கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிரதோஷ தினத்தில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரிய நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

அதனை ஒட்டி ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு பால், சந்தனம் மற்றும் மஞ்சள் தூள், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனை நடைபெற்றது.

பக்தர்களுக்கு அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. அபிஷேக ஆராதனைகளை ஆலய அர்ச்சகர் ராஜகுரு, ஜெகன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இதில் ஏராளமானபக்தர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Share this to your Friends