அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு மாலை நடைபெற்றது.
பிரதோஷத்தையொட்டி அரியலூர் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி,மஞ்சள் சந்தனம், பால்,தேன், உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வைத்திநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதே போல் அரியலூர் ஆலந்துரையார், கைலாசநாதர், விசுவநாதர், விளாங்குடி கைலாசநாதர், குறிஞ்சான் குளக்கரை சாசி விசுவநாதர் , தேளூர் சொக்கநாதர், கீழப்பழூர் ஆலந்துறையார், திருமானூர் கைலாசநாதர் , செந்துறை சிவதாண்டேஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், சென்னிவனம் தீர்க்கப்புரிஸ்வரர், சொக்கநாதபுரம், சொக்கனீஸ்வரர், குழூமூர் குழுமாண்டவர் , தா.பழூர் விசாலாட்சி சமேத விசுவநாதர், கோவிந்தப்புத்தூர் கங்காஜடேஷ்வரர், விக்கிரமங்கலம் சோழிஸ்வரர், உடையவர்தீயனூர் ஜமத்கனிஸ்வரர், கீழநத்தம் சொக்கநாதர், ஸ்ரீபுரந்தான் கைலாசநாதர், கோடாலிகருப்பூர் சொக்கநாதர்,கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார், ஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.