மயிலாடுதுறை செய்தியாளர்
இரா.மோகன்
சிதிலமடைந்துள்ள அறநிலையத்துறை கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் மேளதாள, வாத்தியங்களுடன் தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து கோரிக்கை மனுவை வழங்கிய இந்து மகா சபா அமைப்பினர்.
இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை மண்டலத்துக்கு உட்பட்ட மாங்குடி சிவலோகநாதர் சுவாமி கோயில், கஞ்சனூர் சுயம்பிரகாசர் கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் ஆகிய கோயில்கள் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கிறது. மேலும் பந்தநல்லூரில் உள்ள செல்லியம்மன் கோயிலும் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது. இந்த கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது
குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக மயிலாடுதுறையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் அகில பாரத இந்து மகா சபா கட்சியினர் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம நிரஞ்சன் தலைமையில் இன்று தவில், நாகசஸ்வரம் வித்வான்களின் இன்னிசையுடன் கோரிக்கை அடங்கிய மனுவை வாழைப்பழம் வெற்றிலை-பாக்கு, மாலை, பூவுடன் தட்டில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.