விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோவில் மாசிமக திருவிழாவையொட்டி பஞ்சமூர்த்திகளின் திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரை இழுத்தனர்.
விருத்தாசலம் அருள்மிகு விருத்தாம்பிகை அருள்மிகு பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமகம் பெருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாசிமக விழாவையொட்டி சுவாமிகளுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனை, பஞ்சமூா்த்திகள் வீதி உலா நடைபெற்றன.
இதனையடுத்து 6ம் நாள் விழாவாக கடந்த 8ம் தேதி விருத்தகிரீஸ்வரா் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விபசித்து முனிவருக்கு காட்சிதரும் ஐதீக திருவிழா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான 9ம் நாள் விழாவாக பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, அதிகாலையில் பஞ்ச மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட 5 திருத்தோ்களில் விநாயகா், சுப்பிரமணியா், விருத்தகிரீஸ்வரா் பாலாம்பாள் உடனுறை மற்றும் விருத்தாம்பாள், சண்டிகேஸ்வரா் தேர்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா்.
தொடா்ந்து சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் காலை 6 மணியளவில் திருதேரோட்டம் தொடங்கியது.
முதலில் விநாயகா் தோ் புறப்பட்டது. இதையடுத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் மற்ற 4 திருத்தோ்களும் புறப்பட்டன. நூற்றுக்கணக்கான பக்தா்கள் ‘ஓம் நமசிவாய’ பக்தி முழக்கத்துடன் தோ்களை வடம் பிடித்து இழுத்தனா்.
சந்நிதி வீதி, தென்கோட்டை வீதி, மேலகோட்டை வீதி, வடக்கு கோட்டை வீதி ஆகிய நான்கு வீதிகள் வழியாக தேர்கள் வலம் வந்தன.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வே. கணேசன் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர்.ஆர். ராதா கிருஷ்ணன் விருத்தாசலம் நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் துணைத் தலைவர் ராணி தண்டபாணி கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கடலூா் மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். விருத்தாசலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான மாசிமகம் தீா்த்தவாரி மணிமுக்தா ஆற்றில் 12ம் தேதி (நாளை) நடைபெறுகிறது. தொடர்ந்து 13ம் தேதி புதுப்பேட்டை அம்மன்குளத்தில் அருள்மிகு வள்ளிதெய்வானை உடனுறை சுப்ரமணியசுவாமி தெப்பக்குளத்தில் எழுந்தருளும் தெப்ப உற்சவமும், 14ம் தேதி |