தென்காசி
தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது.

விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார் முதல்வர் (பொ) கலா வென்சிலா முன்னிலை வகித்தார் ஒருங்கிணைப்பாளர் ஷீலா நவரோசி வரவேற்றார் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானு ப்ரியா சிறப்புரையாற்றி பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி பேசினார்.

பேராசிரியர்கள் ஜெனிபர், லீதியாள் சொர்ண ஜெயா, ஐரின், உடற்கல்வி ஆசிரியர் ஜசக் ஜான்சன், நூலகர் முனைவர் ஏஞ்சலின் அலுவலக பணியாளர்கள் ப்ரெட்ரிக், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து மாணவ ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன

Share this to your Friends