சத்தியமங்கலம் ஸ்ரீ வெற்றி இன்ஸ்டிட்யூட் ஆப் பாராமெடிக்கல் கல்லூரியில் ஆண்டு விழா, மகளிர் தின விழா மற்றும் விருது வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது…
இதில் திரைப்பட இயக்குனரும் நடிகருமான ஆர்.சுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருது வழங்கினார். இவ் விழாவிற்கு கல்லூரி தாளாளர் செல்லப்பன் தலைமை தாங்கினார். ரோட்டரிசுந்தரம் குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவு புவனேஸ்வரி கல்லூரி இயக்குனர் கே. எஸ். ஶ்ரீதர் ஆகியோர் முன்னிலை வைத்தனர்
கண்ணம்மாள் ,சாந்தி ரகுபதி மற்றும் ஜேம்ஸ் பள்ளி நிறுவனர் அல்போன்சா மேரி, ஜேம்ஸ் குனராஜ் குத்துவிளக்கு ஏற்றினார்
அதனைத் தொடர்ந்துபல்வேறு துறைகளில் சிறந்த மங்கையர்களையும் மருத்துவர்கள் மற்றும் களப்பணியாளர் களுக்கு விருதுகள் சத்தி நகர மன்ற தலைவர் ஆர். ஜானகி ராமசாமிக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில்
ஆசிரியைகள் திவ்யா, நந்தினி, பிரியா, சத்யா,அபி,கீர்த்தனா, வைஷ்ணவி மற்றும் முன்னாள் மற்றும் இந்நாள் செவிலிய மாணவிகள் என 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவில் சிறப்பித்தனர்