தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் சத்யா வீரமணி தலைமை வகித்தார்.
நகர பேருந்து நிலையத்தில் மகளிர் அணி சார்பில் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. மாவட்ட பொருளாளர் கோபி, மாவட்ட துணை செயலாளர் முருகன், நகர செயலாளர் சிட்டி சுரேஷ்,
ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி நிர்வாகிகள் விஜயராணி, செல்வி, தனலட்சுமி, ராஜேஸ்வரி மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நகர பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று அதியமான் அரண்மனையை சென்றடைந்தனர்.
அங்கு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்ழுறைகளை கண்டித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்தும், அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார்கள்.