திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென் குவள வேலிஅரசு உயர்நிலைப் பள்ளியில் “அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றி வேலன் தலைமை வகித்தார். அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி அஞ்சல் அட்டைகளில் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதினர்.

இது குறித்து பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியருமான, சமூக அறிவியல் மன்ற பொறுப்பாளருமான சூரியகுமார் கூறியதாவது:- அரசு பள்ளிகள் மாணவர்களுக்கு மன உறுதியுடன் கூடிய தரமான கல்வியை வழங்குகின்றனர். மேலும் மாணவர்களுக்கு மருத்துவ உதவிகள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே இது குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக மாணவர்கள் அஞ்சல் அட்டைகளில் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதும் முயற்சியை தொடங்கி இருக்கிறோம்.

அஞ்சல் அட்டைகள் தான் அன்றைய வாட்ஸ் அப். இந்த முயற்சி முக்கியமாக பெற்றோர்களின் கவனத்தை ஈர்ப்பதுடன் நல்ல பலன் தரும் வகையில் 100க்கும் மேற்பட்ட பெற்றோர்களுக்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன என்றார். அரசுப் பள்ளியில் இந்த வித்தியாசமான முயற்சியை பலரும் பாராட்டி உள்ளனர்.

Share this to your Friends