பல் சமய நல்லுறவு இயக்கம் மாநில தலைவர் முகமது ரபி வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தி கூறியிருப்பதாவது;
பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாளாகவும், பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்தும் நாளாகவும் கொண்டாடப்படும் மகளிர் தினத்தில் (மார்ச் 08), அனைத்து பெண்களுக்கும் பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பெண் சமூகத்துக்கும், பெண்களின் உரிமைகளுக்காகவும் உழைக்கின்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மானுடத்தின் சரிபாதிகளுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துகள்
இந்நாளிலும்
எந்நாளிலும்
பெண்களைப் போற்றுவோம்..!
உலகமகளிர்நாள்
பெண்களுக்குரிய உரிமைகளை நிலைநாட்டிட மார்ச் 8 மகளிர் தினத்தில் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்