இந்திய காரல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் நிறுவனர் என் ஆர் பாலமுருகன் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வாழ்த்துச் செய்தியில் தமிழக முதலமைச்சருக்கு மகளிர் நலம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.

அவர் கூறியதாவது தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களிலும் நகராட்சி பேரூராட்சி ஊராட்சிகளில் தூய்மை பணியாளராகவும் பல ஒப்பந்த பணியாளர்களாக வேலை செய்பவர்களை நிரந்தரமாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
கிராமப்புற தேசிய நூறு நாள் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி அவர்களுடைய சம்பளங்களை 500 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.
அரசு அலுவலகங்கள் காவல்துறை மருத்துவத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தரப்பு மகளிர்களுக்கு அந்தந்த அலுவலகங்களில் பெண்களுக்கு மனரீதியாக ஏற்படும் மன அழுத்தத்தை சரி செய்யும் விதமாக
ஒரு கவுன்சிலிங் பெண்கள் ஆணைய குழு ஒன்றை நிர்ணயம் செய்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.
மேலும் பெண்களுக்கு எதிரானபாலியல் சீண்டல்கள் ஏற்படாமல் தடுக்க தக்க பாதுகாப்பைஉறுதிப்படுத்த வேண்டும்.

பாலியல் ஈடுபடும் எந்த உயர் அதிகாரிகார இருந்தாலும் அவர்கள்
மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மாற்றுத்திறனாளி பெண்களுக்கு அரசு வேலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Share this to your Friends