கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
அவிநாசி பாளையத்தில் நகை வியாபாரியின் காரை வழி மரித்து போலீஸ் எனக்கூறி ரூபாய்1 கோடியே 10 லட்சம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது- முக்கிய குற்றவாளிகள் மூன்று பேருக்கு வலை…
கரூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தின மாலை இவரது ஓட்டுனர் ஜோதி என்பவரை அழைத்துக் கொண்டு ரூபாய்1 கோடியே 10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தங்க நகைகள் வாங்குவதற்காக கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அவிநாசி பாளையம் காவல் நிலைய பகுதி சம்பந்தம் பாளையம் பிரிவு அருகே வரும்போது காரில் வந்த நான்கு நபர்கள் வாகனத்தை மறித்து தாங்கள் போலீஸ் என கூறி வெங்கடேஷ் வந்த காரில் மூன்று நபர்கள் ஏரி உள்ளனர் பிறகு வாகனத்தை எங்கும் நிறுத்தாமல் அவினாசி பாளையம்- தாராபுரம் ரோட்டில் செல்லுமாறு மிரட்டியதாகவும் வேங்கி பாளையம் வாய்க்கால் அருகே வரும்போது வாகனத்தை நிறுத்த கூறி வெங்கடேஷிடம் இரண்டு பேக்கில் இருந்த ரூபாய்1 கோடியே 10 லட்சம் பணத்தையும் அவர்கள் வைத்திருந்த3 செல்போன்களையும் பறித்துக்கொண்டு மற்றொரு காரில் ஏறி மூன்று நபர்களும் சென்று விட்டதாகவும் பின்பு வெங்கடேஷ் மற்றும் அவருடைய டிரைவர் ஜோதி என்பவரும் மேற்கண்ட சம்பவத்தை நேற்று காலை காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த முதலில் காங்கேயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த போது சம்பவம் நடந்த இடம் அவினாசி பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என தெரிவித்ததால் அவிநாசி பாளையம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். இந்நிலையில் ஓட்டுநர் ஜோதிவேல் என்பவருக்கு கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட கரூர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் குளித்தலை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் ஸ்ரீகாந்த் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மூன்று பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.