தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் வரதலட்சுமி மற் றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 1993 பணியில் சேர்ந்து பதவி உயர்வு பட்டியலில் காத்திருக்கும் அங்கன்வாடி பணியாளர் களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதம் முதல் 24 மாதம் வரை நமது மையத்தில் இணை உணவை டிஹெச்ஆராக வாங்கக்கூடிய பயனாளிக ளின் முகத்தை புகைப்ப டம் எடுத்து. போஸான் டிராக்கரில் (பேஸ் கேப்சர்) செய்யும் முறையை உடன டியாக கைவிட வேண்டும். மே மாதம் ஒரு மாதம் கோடை விடுமுறை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்