தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர்.ஜெ-வின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்மா டிராபி 2025 மாபெரும் கிரிக்கெட் போட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் ஏற்பாட்டில் மார்ச் 1 மற்றும் இரண்டாம் தேதிகளில் சங்கர பேரி விளக்கு அருகில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில்
நடைபெற்றது.

இதில் அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டியை துவங்கி வைத்து விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிக்க சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியை துவங்கி வைத்து சிறப்புரையாற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையும், கோப்பையையும் வழங்கி போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.


இந்த போட்டியில் முதல் பரிசுத்தொகை ரூ25,077ஐ MSM அணியும், இரண்டாம் பரிசு தொகை ரூ20,077ஐ மாதா நகர் அணியும் , மூன்றாம் பரிசு தொகை ரூ15,077ஐ நிலா சிசி அணியும் , நான்காம் பரிசு தொகை ரூ10,077ஐஷேடோ சிசிஅணியும் , ஐந்தாம் பரிசு தொகை ரூ 5,077ஐ ஜிஜியோ சிசி அணியும் தட்டிச் சென்றனர்.

இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாநில இணைச் செயலாளர் பெருமாள் சாமி,முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா.சுதாகர், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான வழக்கறிஞர் பிரபு,

மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்.ராஜா,திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் மந்திரமூர்த்தி,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே பிரபாகர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் R.ஜூலியட், ரவிசங்கர்.

மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் சுதர்சன் ராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் கே.என் ஆனந்தராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஸ்ரீ பாலாஜி முத்துமணி,கிழக்கு பகுதி செயலாளர் சேவியர், வடக்கு பகுதி கழக துணை செயலாளர் செண்பக செல்வன், தெற்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் சுடலைமணி, வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர்கள் ஆண்ட்ருமணி, சரவண பெருமாள், முனியசாமி, சிவசங்கர்,

மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளர் ராஜேஸ்வரி,மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் அலெக்ஸ்ஜி, மாணவர்அணி துணைத் தலைவர் முகமது காலிப் உசேன், மாணவரணி பொருளாளர் முத்துக்குமார், மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் சுந்தரேஸ்வரன், பொருளாளர் பரிபூரண ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சகாயராஜா,

மேற்கு பகுதி மாணவர் அணி செயலாளர் சுப்பிரமணி,மத்திய வடக்கு பகுதி மாணவரணி தலைவர் ரியாஸ் அகமது, வடக்குப் பகுதி மாணவரணி தலைவர் மாயாண்டி, மேற்குப் பகுதி மாணவரணி துணைச் செயலாளர்கள் தளவாய் ராஜ், ராஜா, பிரகாஷ், கிழக்குப் பகுதி மீனவர் அணி செயலாளர் வசந்த், ஐடிவிங்க் இணைச்செயலாளர் ஜெபராஜ் ஜெபசிங்,

வட்ட கழகச் செயலாளர்கள் கொம்பையா, சொக்கலிங்கம், பூக்கடை S.N வேலு ,ஆனந்த், முன்னாள் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன், வழக்கறிஞர்கள் உதயகுமார், முகேஷ் ராஜா, மாரிஸ் மாவட்ட அஜித் ரசிகர்கள் மன்ற பொருளாளர் சந்தன ராஜ், மற்றும் சாம்ராஜ்,உதயா, அக்‌ஷய்லிங்கம்,சண்முகபுரம் மாடசாமி, லிங்க ராஜ், கார்த்திக் காதர் சிதம்பர ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் செய்திருந்தார்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *