காங்கயம் செய்தியாளர் பிரபு செல்:9715328420
காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புகள் ரூ. 31 ஆயிரத்துக்கு ஏலம்
காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. அதில் காங்கயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 5 விவசாயிகள் 221 கிலோ எடையுள்ள 7 தேங்காய் பருப்பு மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
அதனை காங்கயம் சுற்றுவட்டார பகுதியான காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 3 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். இதில் குறைந்தபட்ச விலையாக ரூ. 92.00க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 145.00க்கும் பருப்புகள் ஏலம் எடுக்கப்பட்டது.
221 கிலோ எடையுள்ள 7 தேங்காய் பருப்பு மூட்டைகள் மொத்தமாக ரூ. 31 ஆயிரத்து 846 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.