செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தை முன்னேற்ற சங்கம் தொடக்க விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்க தலைவர் டாக்டர் வந்தை பிரேம் தலைமை தாங்கினார். நகர் மன்ற துணைத் தலைவர் அன்னை க. சீனிவாசன், நகர செயலாளர் தயாளன், கௌரவ தலைவர் மூவேந்தன், புதுவை அச்சுவ்மென்ட் ரெக்கார்ட்ஸ் நிர்வாகி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் செல்வ விநாயகமூர்த்தி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணிவேந்தன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் வந்தவாசியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது வரவேற்புக்கு உரியது என்று கூறினார். மேலும் திரைப்பட நடிகரும், இயக்குனருமான டாக்டர் இ.வி.கணேஷ் பாபு பங்கேற்று கருத்துரைகளை வழங்கினார்.
மேலும் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழில் கையொப்பம் இடுவோம் உலக சாதனை நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும் மத்திய அரசின் பத்மஶ்ரீ விருது பெற்ற புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பல்வேறு நிலைகளில் சாதனைகள் புரிந்த எம்.பி.வெங்கடேசன், நூலகர் தமீம், சரண் ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது. முன்னதாக தேரடியில் இருந்து தேசத் தலைவர்கள் வேடமிட்ட மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் பேரணியாக விழா மேடைக்கு வந்தனர். நிகழ்வை சங்க ஆலோசகர் கு.சதானந்தன், சின்னத்திரை நடிகை தீபிகா ஆகியோர் தொகுத்து வழங்கினர். இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர். இறுதியில் சங்க பொருளாளர் தெள்ளாறு முருகன் நன்றி கூறினார்.