கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்பு விழா நடைபெற்றது.
கரூர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் 23வது பட்ட மேற்பு விழா வில் 16வது அறக்கட்டளை பரிசளிப்பு விழாவும், நடைபெற்றது .மற்றும் 2023-2024 ஆம் கல்வியாண்டில் பட்ட மேற்படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு 23வது பட்டமேற்பு விழாவும் நடைபெற்றது.
இவ்விழாவில் சென்னை பி.எஸ். அப்துர் ரகுமான், கிரசென்ட் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் நூ. தாஜுத்தீன் பி.ஹெச்டி.டிஎஸ்சி ஆகியோர் கலந்துகொண்டு 1273 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் சா.சுதா, தேர்வு கட்டுப்பாட்டாளர்கள், முனைவர் ஏ.கற்பகம் மற்றும் அனைத்து துறை தலைவர்கள்,பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற கல்லூரி பெருமை சேர்த்த மாணவ, மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் கல்லூரியில் செயல்படும் 44 ஆவது அறக்கட்டளை சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், இருபால் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.