திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த இரும்பேடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 61 ஆவது ஆண்டு விழா மற்றும் தேசிய அறிவியல் தின விழா நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஐ.இராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
வானவில் மன்ற பொறுப்பாளர்கள் மந்திரமா…! தந்திரமா…! அறிவியல் செயல்பாடுகளை மாணவர்களுக்கு நேரடியாக விளக்கம் அளித்தார்கள். மேலும் மாணவர்கள் பங்கேற்ற பேச்சு போட்டிகள், ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும் அனைத்து மாணவர்களுக்கு அறிவியல் இதழான துளிர் மாத இதழ் வழங்கப்பட்டது. முன்னதாக அனைத்து மாணவர்களும் தேசிய அறிவியல் தின உறுதிமொழியை ஏற்றனர். இந்த நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.