எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
தமிழகத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று பார்வை குறைபாடு உடைய மாணவன் சாதனை. மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் நேரில் சென்று வாழ்த்தி உதவித்தொகை வழங்கினார்
மயிலாதுறை மாவட்டம் சீர்காழி அருகே கேவரோடை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ், சரளா தம்பதியினர் இவர்களுக்கு அரவிந்த், ஆனந்த் இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அரவிந்த் இளநிலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். இளைய மகன் ஆனந்த் பார்வை குறைபாடு உள்ளவர் ஆவார்.
இவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள பார்வை குறைபாடு உடையோருக்கான சிறப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வெளியான 12 வகுப்பு தேர்வில் 486 மதிப்பெண் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதை அறிந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் நேரில் சென்று ரூபாய் 50,000 நிதி உதவித்தொகை வழங்கினார் மற்றும் மேற்படிப்புக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கண்டிப்பாக செய்து தருகிறோம் என்று உத்தரவாதம் அளித்தார்
இந்நிகழ்வில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் என் பன்னீர்செல்வம் சீர்காழி ஒன்றிய செயலாளர்கள் பஞ்சு குமார் பிரபாகரன் மலர்விழி திருமாவளவன் நகர செயலாளர் சுப்பராயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்