பாபநாசம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக வழிபாடும், பேரூர் அலுவலகத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட ஏழை எளியோர்களுக்கு தஞ்சை வடக்கு மாவட்டத் துணைச் செயலாளர்கள் கோவி.அய்யாராசு, துரைமுருகன்,தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் பேரூர் கழக செயலாளர் கபிலன், ஆகியோர் அறுசுவை உணவு வழங்கினர் .

இதில் திமுக கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Share this to your Friends