நாகை மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவர் இ. சுதர்சன்… தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, நாகப்பட்டினம் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஒருங்கிணைத்த சாலை பாதுகாப்பு மாதம் – 2025 நிகழ்வில் பள்ளி சாலைப் பாதுகாப்புக் குழுக்களுக்கிடையே விழிப்புணர்வு போட்டிகள் நாகப்பட்டினம் கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் மருங்கூர், அரசு உயர்நிலைப் பள்ளியைச் சார்ந்த 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர் இ. சுதர்சன் என்பவர் முதல் இடம் பெற்றமைக்காக பாராட்டி சான்றிதழ் & பதக்கத்தை நாகப்பட்டின மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.