தேனி மாவட்டத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு மின்தடை கிடையாது மின்வாரியம் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் 10 ஆம் வகுப்பு 11 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற உள்ளன மாணவர்களின் எதிர்காலத்தின் படிப்பு தடை படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தமிழகத்தின் நல்லாட்சி நடத்தி வரும் திராவிட மாடல் அரசான திமுக அரசின் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மின்சாரம் தடையின்றி வழங்க வேண்டும் என மின்வாரியத் துறையினருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்
இதன் காரணமாக வரும் மார்ச் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களுக்கு பகலில் மின்தடை செய்ய வேண்டாம் என மின்வாரியம் உயர் அதிகாரிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மின் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர் இதன் படி தமிழக கல்வித்துறை
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி முடிவடைகிறது
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 5ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதியும்
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதியும் முடிவடையும் என்று கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என மின்வாரியத்திற்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கும் மின்சாரத் துறை அமைச்சருக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.