காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக உரிமை மீட்பு குழு அணி சார்பில் காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை பகுதியில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

பொதுமக்களுக்கும்,கட்சித்தொண்டர்களுக்கும் இனிப்புகள் மற்றும் இட்லி,வடை, பொங்கள்,கேசரி என அறுசுவை உணவினை வழங்கி ஜெயலலிதாவின் பிறந்த நாளை அதிமுக உரிமை மீட்புக்கு அணியினர் கொண்டாடினர்

அதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக உரிமை மீட்புக் குழு அணி சார்பில் காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை பகுதியில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கற்பூர தீபாராதனை காண்பித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அதன் பிறகு ஏராளமான பொதுமக்களுக்கும்,கட்சி தொண்டர்களுக்கும் இனிப்புகளை வழங்கியும்,இட்லி,வடை, பொங்கள்,கேசரி என அறுசுவை உணவினை அன்னதானமாக வழங்கி ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.

அதிமுக ஓ.பி.எஸ் உரிமைகள் மீட்பு குழு அணியினர் வழங்கிய அறுசுவை உணவினை பொதுமக்கள் ரசித்து ருசித்து உண்டு மகிழ்ந்து சென்றனர்.

இந்நிகழ்ச்சியில்,மாநில கழக அமைப்பு செயலாளர் K.கோபால், சோமங்கலம் ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் பொருளாளர் வஜ்ரவேலு, துணை செயலாளர் ஷகிலா வேலு, பொதுக்குழு உறுப்பினர் பழனி , ஒன்றிய கழக செயலாளர்கள் மாகரல் சசி, மாலிக் பாஷா, முனிரத்தினம், கோவிந்தராஜ்,விஜயன், அருண், படப்பை முரளி, வல்லம் பழனி, பேரூராட்சி கழக நிர்வாகிகள் வாலாஜாபாத் ஜெயகாந்தன், குலசேகரன், ரவிக்குமார், தொகுதி செயலாளர்கள் யோகானந்தம், காமாட்சிகான்,மாவட்ட அணி நிர்வாகிகள் சரத்குமார், குன்றத்தூர் மு. சூரியன், பூக்கடை ஜகா, படப்பை பாபு, மகளிர் அணி சாந்தி டெல்லி பாபு அணி நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், முருகன், நிக்சன், சந்திரசேகர், செல்வம், சக்திவேல் மற்றும் தினேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Share this to your Friends