தேனி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் முதல்வர் மருந்தகம் திறப்பதற்கான ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் முதல்வர் மருந்தகம் தொடங்குவதற்கான முதல் கட்டப் பணிகளை தமிழக சமூக நலத்துறை ஆணையர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆர்
லில்லி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜுத் சிங் ஆகியோர் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்
தமிழக முதல்வர் பொது மக்களுக்கு குறைந்த விலையில் ஆங்கில மருந்துகள் கிடைத்திடவும் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கிடவும் மாநிலம் முழுவதும் முதல் மருந்தகம் தொடங்க அறிவுரைத்துயுள்ளார்கள். இதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் கூட்டுறவு துறை மூலம் புதிதாக திறந்து வைக்கப்பட உள்ள முதல்வர் மருந்தகங்கள் தொடங்குவதற்கான மருந்தகம் உரிமம் பெறுதல் உள் கட்டமைப்பு பணிகள் உள்ளிட்ட முதல் கட்ட பணிகள் நடைபெற்று
வருவதை தொடர்ந்து முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட உள்ள தேனி சம தர்மபுரம் அல்லிநகரம் போடிநாயக்கனூர் பழனிசெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் புதிதாக தொடங்கப்பட்டவுள்ள முதல்வர் மருந்தகம் முதல் கட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லில்லி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜுத் சிங் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்கள் முன்னதாக மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் புதிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் புதிய வைத்த இடங்களில் மினி பேருந்துகள் இயக்க 34, வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது இதில் விண்ணப்பிக்க 14.3.2025 வரை காவ அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது
இதுவரை விண்ணப்பங்கள் பரிந்துரை செயல் முறைப்படுத்தப்பட்டு மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது மாவட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா விண்ணப்பித்த அனைவருக்கும் விரைவில் தகுதியின் அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தமிழக அரசின் ஆணையர் ஆர்.லில்லி அறிவுறுத்தினார் இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன் இணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆரோக்கிய குமார் தனித்துணை ஆட்சியர் சாந்தி மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேனி உத்தமபாளையம் போடிநாயக்கனூர் வட்டாட்சியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்