தென்காசி மாவட்டம்
செங்கோட்டையில் சொத்து பிரச்சனையில் அண்ணனை வண்டி ஏற்றி கொலை செய்ய முயற்சித்து விபத்து என்று நாடகமாடிய தம்பி மற்றும் தம்பி மகன் கைது.
தென்காசி மாவட்டம் புளியரை தெற்குமேடு பாக்யாநகரை சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது உடன் பிறந்த தம்பி அதே ஊரை சேர்ந்த இருளப்பன் என்பவருக்கும் நடைபாதை பிரச்சனை இருந்து வந்தது. தம்பி இருளப்பன் மற்றும் இவரது மகன் வினோத்குமார் இருவரும் சேர்த்து சுப்பையா பாண்டியனை கொலை செய்ய முடிவெடுத்து சுப்பையா பாண்டியன் காய்கறி வியாபாரத்திற்காக தனது இரு சக்கர வாகனத்தில் செங்கோட்டை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பெரிய பிள்ளை வலசை வழியாக செல்லும் போது அவரை பின் தொடர்ந்து (pickup) வண்டியை ஓட்டி வந்த வினோத்குமார் என்பவர் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார்.
இது சம்பந்தமாக செங்கோட்டை காவல் ஆய்வாளர் K.S. பாலமுருகன் சம்பவம் இடம் சென்று விசாரித்து அங்குள்ள CCTV கேமராக்களை ஆய்வு செய்ததில் நடந்த சம்பவம் விபத்து இல்லை கொலை முயற்சி என விசாரணையில் தெரிய வர சம்பவத்தில் ஈடுபட்ட இருளப்பன் மற்றும் அவரது மகன் வினோத்குமார் மற்றும் அவர்கள் பயன்படுத்திய (pickup) வண்டியையும் பிடித்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி பின் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
மிகவும் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்த செங்கோட்டை காவல் ஆய்வாளர் பாலமுருகனை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினார்.