தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து இராமேஸ்வரத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்தும், அதைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னையில் நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம். மேலும், ஒன்றிய அரசைக் கண்டித்துக் கண்டன முழக்கமிட்டனர். இராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முன்னேற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், முன்னாள் ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளரும், தீர்மானக் குழு துணைத்தலைவருமான சுப.த.திவாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பவானி ராஜேந்திரன், திமுக மீனவர் அணி துணைச்செயலாளர் ராமச்சந்திர ராமவணி, ராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.