தேனி மாவட்ட வணிக சங்கங்களின் முப்பெரும் விழாவில் மாநிலத் தலைவர் விக்ரம் ராஜா பங்கேற்பு மாவட்ட தலைநகரான தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி மாவட்ட வணிகர்கள் சங்க முப்பெரும் விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா பேசியதாவது

தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக 42 ஆவது மாநில மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ள மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்கிறார் மிக சிறப்பாக நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய மாநாடாகவும் தமிழத்தில் உள்ள வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் குறிப்பாக ஆன்லைன் வர்த்தகத்தால் வியாபாரிகள் பாதிப்பு கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம் பாதிப்பு வியாபாரிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விலையை தனித்தனியாக உற்பத்தியாளர்கள் நிர்ணயம் செய்து கொண்டிருக்கின்றனர்

இதையெல்லாம் மாற்றம் செய்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாநாட்டில் முதல்வரிடம் தெரிவிக்க இருக்கிறோம் மேலும் வியாபாரிகளுக்கு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வாடகை கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்

வியாபாரிகள் மீது அதிகாரிகள் விதிக்கும் அபராத தொகையை குறைக்க வேண்டும் மாநகராட்சி நகராட்சி பேரூர் மற்றும் ஊரகப்பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கடை நடத்தும் வியாபாரிகளின் வாடகை கட்டணத்தை கணிசமாக குறைக்க வேண்டும் என்று சென்னையில் மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேருவை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம்

இது சம்பந்தமாக உள்ளாட்சி அமைப்பு அதிகரிகளுடன் பேசி ஒரு வார காலத்தில் நல்ல முடிவு எடுப்பதாகவும் இது குறித்து தமிழகம் முழுவதும் இருக்கும் வியாபாரிகள் அச்சப்பட வேண்டாம் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார் மேலும் அடுத்த ஆண்டு 2026 இல். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது எந்தெந்த கட்சிகள் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும்

என்று பலப்பரிட்சை நடந்து கொண்டிருக்கிறது இதனால் நம் நடத்தும் மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் அனைவரும் ஒற்றுமையாக கலந்து கட்டுக்கடங்காமல் நமது வியாபாரிகள் கூட்டம் இருக்க வேண்டும் ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்

என்று யார் விரும்பினாலும் தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பின் பங்களிப்பு கட்டாயம் வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும் நமது கோரிக்கைகளை யார் நிறைவேற்றித் தருவார்கள் என எழுத்து பூர்வமாக அறிக்கை தர வேண்டும் என்று நடைபெற உள்ள மாநாட்டில் வலியுறுத்த இருக்கிறோம் எனவே நடைபெற உள்ள மாநாட்டை நமது வியாபாரி களின் வாழ்வாதாரத்தை காக்கும் மாநாடாக அமைத்துத் தர வேண்டும்

ஒரே நாடு ஒரே வரி ஒரே சட்டம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார் ஆனால் 4 கட்டங்களாக வரிகளை பிரித்து வைத்து இருக்கிறார்கள் உலகத்திலேயே இந்திய திருநாட்டில் தான் ஜிஎஸ்டி வரிவிதிப்பு மிக அதிகமாக இருக்கிறது ரூபாய் 1 லட்சம் கோடிக்கு வருமானம் வந்துவிட்டால் எல்லா வரிகளையும் நிறுத்தி விடுவதாக மத்திய அரசு அறிவித்தது இந்த அறிவிப்பால் வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்

ஆனால் தற்பொழுது 2 லட்சம், கோடிக்கு மேல் வருமானம் வந்துவிட்டது இதனால் கட்டாயம் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டத்தை எளிமையாக்க வேண்டும் 4 கட்டங்களாக இருக்க கூடிய வரியை ஒரே வரியாக ஆக்க வேண்டும். அப்படி ஆக்கினால் பொதுமக்கள் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி என்ற மதிப்பு கூட்டு வரி செலுத்தி வாங்க வேண்டிய நிலை ஏற்படும்

இதனால் மத்திய மாநில அரசுகளுக்கு 6 லட்சம் கோடி வருவாய் வரும் வாடகைக்கு கடை எடுக்கும் போது முன்வைப்புத் தொகை கொடுத்திருந்தால் அந்தத் தொகையை கட்டாயம் திருப்பி தர வேண்டும் அப்படி தரவில்லை என்று எங்கள் வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக முதலமைச்சரின் தெரிவித்து அந்த நிலையை மாற்றுவோம் இந்தியாவில் உள்ள வணிகர்களின் வணிகத்தை சூறையாட வெளிநாட்டு நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக பொருட்களை விற்பனை செய்து வருகின்றார்

இதை எல்லோரும் இணைந்து தடுக்க வேண்டும் ஆன்லைன் வர்த்தகத்தால் 27 சதவீதம் வியாபாரத்தை இழந்து இருக்கிறோம் ஆன்லைன் வர்த்தகம் சூதாட்டம் போல் நடந்து வருகிறது இதை தடை செய்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மத்திய மாநில அரசுகள் காக்க வேண்டும் இவ்வாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமா ராஜா பேசினார்

இந்த விழாவில் பேரமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் கே எஸ் பெருமாள் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் செல்வக்குமார் கம்பம் வர்த்தக சங்க தலைவர் முருகன் உள்பட தேனி மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் விழாவின் நிறைவாக மாவட்ட வர்த்தக சங்கங்களின் செயலாளர் ஆர் .கே.உதயகுமார் நன்றி கூறினார்

Share this to your Friends