ராஜபாளையத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பெற்ற நெல்லுக்கு 24 நாட்கள் கடந்தும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படாத குறித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் அம்மையப்பன் ராஜபாளையம் வட்டார தலைவர் கேசவ ராஜா முன்னிலை வகித்தனர்.
இதில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விதிப்படி விவசாய கடன் பெற்ற தேதியில் இருந்து ஐந்து நாட்களுக்குள் பண பட்டுவாடா செய்ய வேண்டும் என்று விதி இருந்தும் 21 நாட்கள் கடந்தும் பணம் செலுத்தப்படவில்லை.
இதனால் பல்வேறு தேவைகளுக்காக இதை நம்பி இருக்கும் விவசாயிகள் சிக்கலை சந்தித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நகர செயலாளர் பிள்ளையார் நன்றி கூறினார்.