செங்குன்றம் செய்தியாளர்
தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட குற்றங்கள் நிகழாமல் தடுக்க ஆவடி காவல் ஆணையராக இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் சார்பாக ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த,மாதவரம் பால் பண்ணை மாத்தூர் சுற்றுப்புறங்களில்
செங்குன்றம் சரக காவல் துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆலோசனையில், உதவி ஆணையாளர் மகிமைவீரன் தலைமையில், மாதவரம் பால் பண்ணை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாகரன், உதவி இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்கள், இந்து கோயில்கள் , இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்கள் , பூங்கா பஸ்நிலையம் , மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள் , பொதுமக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து சைபர் கிரைம் குற்றம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.