C K RAJAN Cuddalore District Reporter 9488471235
கடலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு
விருத்தாசலம் தனியார் மண்டபத்தில் தேர்தல் ஆணையராக விழுப்புரம் மாவட்ட தலைவர் ரகுபதி,துணை தேர்தல் ஆணையராக ராஜேந்திரன், பார்வையாளராக குணசேகரன் ஆகியோர் பொறுப்பேற்று தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட தலைவராக செல்வராஜ், செயலாளராக ராஜேந்திரன், பொருளாளராக சந்திரா,துணை தலைவர்களாக ஜெகத்ரட்சகன், நல்லதம்பி, பூவராக மூர்த்தி, பிரச்சார செயலாளராக கவிஞர் ம.ரா சிங்காரம்,இணை செயலாளராக அருள் பிரகாசம், அமைப்பு செயலாளராக விஜயராகவன் ஆகியோர் ஒருமானதாக தேர்வு செயப்பட்டார்கள்.தொடர்ந்து 80 வயது பூர்த்தி அடைந்த 8 நபர்களுக்கு பாராட்டு பெட்டகம் வழங்கப்பட்டது,
70 வயது முடித்தவர்களுக்கு 10 சதவிகித ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு மருத்துவ செலவு தொகை செலவுத்தொகை முழுமையாக கிடைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும். என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட பிரச்சார செயலாளர் கவிஞர்ம.ரா. சிங்காரம் நன்றி கூறினார்.