தேனி மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சுமார் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கால்பந்து மற்றும் கிரிக்கெட் மைதானத்தை ஊரக மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி துவக்கி வைத்து பேசுகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையை அதிகமாக கவனிப்பதால் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துகிறார்.
இதனால் விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. என்று பேசினார் மேலும் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது வருகின்ற 2026 தேர்தலில் ஐந்து முனை போட்டியாகவும் திமுகவிற்கு எதிரி அணியே இல்லாத தேர்தலாக இருக்கும் எனவும் மேலும் தற்போது உள்ள கூட்டணிகளை வலுப்படுத்தி மீண்டும் 200 சீட்டிற்கு மேல் பெற்று ஆட்சியில் அமரும் என்று சூளுரைத்தார்.
இந்நிகழ்வை தொடர்ந்து மாற்றுத்தினாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், ஆதரவற்ற விதவைகளுக்கு இலவச தையல் மெஷின் , தேனி ஊராட்சி ஒன்றியம் தூய்மை பணியாளர்களுக்கு குப்பை அள்ளும் வண்டிகள் உள்பட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் சப் – கலெக்டர் ரஜத் பீடன், மாவட்ட திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் நல்லதம்பி, தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், , தேனி நகர் திமுக செயலாளர் நாராயண பாண்டியன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதாசசி தேனி அல்லிநகரம் நகராட்சி துணை தலைவர் செல்வம் உள்பட அரசு துறை அதிகாரிகள், பணியார்கள் , தி.மு.க நிர்வாகிகள் , விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.