சபாநாயகர் அமைச்சருக்கு எதிராக கோவில்பட்டியில் கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம்
கோவில்பட்டி மக்களின் எதிர்பார்ப்புகளை மீறி தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வரும் தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதாஜீவனை கண்டித்து தமிழ் பேரரசு கட்சியினர் , 5வது தூண் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் கோவில்பட்டி தாலுகா அலுவலக முன்பிருந்து கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு ஊர்வலமாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்