தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கருவேல் நாயக்கன்பட்டியில் உள்ள பாஜக மாவட்ட கட்சி அலுவலகத்தில் புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் பாஜக மாநில தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ள பி. ராஜ பாண்டியனுக்கு மாவட்ட பாஜக நகர தலைவர்கள் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மாலை அணிவித்து தங்களின் கட்சி பணி மென்மேலும் சிறக்க வேண்டுமென வாழ்த்தினார்கள்
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் பாஜக நகரத் தலைவர்கள் போடி சித்ரா தேவி தண்டபாணி சின்னமனூர் சிங்கம் முன்னாள் நகரத் தலைவர் இ. லோகேந்திர ராஜன் கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆர். பிரதீபா ரெங்கபாபு போடி நகர்மன்ற பாஜக கவுன்சிலர் எஸ் மணிகண்டன் உள்பட பாஜக மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக பாஜக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.