கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த பால தண்டாயுதபாணி திருகோயில்களில் தைப்பூசத் திருநாள், மிக விமர்சியாக கொண்டாடப்பட்டதுஇதில், ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.இன்று, முருகப்பெருமானின், ஆறுபடை வீடுகள் உட்பட, உலகெங்கும் உள்ள முருகப்பெருமான் திருக்கோயில்களில், தைப்பூசத் திருநாள், கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, அகரம் பால தண்டாயுதபாணி கோவில், திருக்கோவில் உள்ளிட்ட போச்சம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வேல்முருகன் திருக்கோவிலில், தைப்பூசத் திருநாளை ஒட்டி, சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றன.முன்னதாக, மூலவர் முருகப்பெருமானுக்கு, அதிகாலை முதலே, பால், தயிர், வெண்ணெய், மஞ்சள், குங்குமம், சந்தனம், திருநீறு, பன்னீர் உள்ளிட்ட, திரவியங்களை கொண்டு, சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடரந்து,மூலவர் முருகப்பெருமானுக்கு, மலர்களாலும், சந்தனத்தாலும், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. பின்னர், வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, சந்தனகாப்பு மலர் அலங்காரத்தில், எம்பெருமான் முருகன், காட்சி அளித்தார்.அப்போது, முருகப்பெருமானுக்கு, பஞ்சமுக தீப மகா மங்கள ஆரத்தி தீபாராதனை காட்டப்பட்டது.
இதனை ஒட்டி, ஏராளமான பக்தர்கள், திருக்கோவில் , சிறப்பு வழிபாடுகள் நடத்தினார்கள்.இதில், கோவில் பரம்பரை தர்மகர்த்தா தண்டபாணி குடும்பத்தினர் தலைமையில் மற்றும் கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், கலந்து கொண்டு, எம்பெருமான் வேல்முருகனை, வழிபட்டனர்.