பாபநாசத்தில் தஞ்சை மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட வட்டார நகர புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் என்.கே.சேகர் தலைமை வகித்தார். பாபநாசம் தெற்கு வட்டார தலைவர் சேதுராமன் வரவேற்று பேசினார்

விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சந்திரசேகர மூப்பனார் குத்துவிளக்கேற்றி புதிய அலுவலகத்தினை திறந்து வைத்து இனிப்புகள் வழங்கினார்.

விழாவில் மாவட்டத் துணைத் தலைவர் மாஸ்கோ பாபநாசம் வடக்கு வட்டாரத் தலைவர் விவேக் மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்குமார் மாவட்ட பொருளாளர் சிவ.இ. சரவணன் மாவட்ட விவசாய அணி தலைவர் முருகராஜ் மெலட்டூர் நகரத்தலைவர் செல்வராஜ் அய்யம்பேட்டை நகர தலைவர் முருகராஜ் அய்யம்பேட்டை நகர செயல் தலைவர் ராஜாராமன் அம்மாபேட்டை தெற்கு வட்டார தலைவர் கனகராஜ் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கார்த்திகேயன் முருகையன் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் விக்டர் தொழில்நுட்ப பிரிவு தலைவர் முருகவேல் மாவட்ட மகளிர் அணி தலைவர் சுகன்யா சங்கர் ஊடகப்பிரிவு தலைவர் மணிவண்ணன் மற்றும் மாநில மாவட்ட வட்டார நகர சார்பு அணி தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முடிவில் பாபநாசம் நகர தலைவர் பக்ருதீன் அலி அகமது நன்றி கூறினார்.

Share this to your Friends