மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் சொக்கன் கூட்டம் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர், மாயப்பெருமாள், பெத்தம்மாள், திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் கோ பூஜை, மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஹோமங்கள் மகா பூர்னாகுதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டு கால யாகபூஜையுடன் யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
தொடர்ந்து சுவாமி சிலைகள் மீது புனித தீர்த்தங்கள் ஊற்றபட்டது. பின்னர் வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை மலர்களும், அன்னதானமும், பிரசாதமும், வழங்கினர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சொக்கன் கூட்டம் வகையறா பங்காளிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.