மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்

மயிலாடுதுறையில் நடைபெற்ற 3வது புத்தக திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்த வான்வெளியை நிஜ உலகாக கானும் கோளரங்கம், பிகைன்ட் எர்த் அதிசயம். பல்லாயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் மூன்றாவது புத்தகத் திருவிழா
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் நடத்தப்பட்டது. இப்புத்தகத் திருவிழா மாணவர்களையும் பொதுமக்களையும் கவுரும் வகையில் தினந்தோறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்றது.
குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டு வரவேற்பை பெற்றது. இதில் குறிப்பாக பள்ளி மாணவர்களை பொதுமக்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த வான்வெளியை நிஜ உலகாக காணும் கோளரங்கம், மற்றும் பிகைன்ட் எர்த் குழுவினரால் தொலைநோக்கியில் வான்வெளியை காண்பது பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது.
கோளரங்கத்தில் விண்வெளியில் உள்ள பூமி, பூமியை சுற்றியுள்ள கோள்கள், தத்ரூபமாக நிஜ உலகாக கண்முன்னே கொண்டு வந்து காண்பிக்கப்பட்டது பள்ளி மாணவர்களையும், பொதுமக்களையும் ஆச்சரியப்பட வைத்தன.
புத்தக திருவிழாவிற்கு குடும்பத்தினராடு வந்த பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு கோலரங்கத்தையும், பிகைன்ட் எர்த் குழுவினரால் தொலைநோக்கியில் காண்பிக்கப்பட்ட நிலா, நட்சத்திரங்களை கண்டு ரசித்து அசந்து போயினர். கோளரங்கத்தையும், பிகைன்ட் எர்த் தொலைநோக்கி வாயிலாக நிலாவை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்லாயிரக்கணக்கானோர் ரசித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.