திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில், தைப்பூச பிரமோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி, தினந்தோறும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவில் ஒன்பதாம் நாளான நேற்று திருத் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருத்தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கீழ அக்ரஹாரம், தெற்கு அக்ரஹாரம், மேல அக்ரஹாரம், வடக்கு அக்ரஹாரம் வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. திருத் தேரோட்ட நிகழ்ச்சியை உபயதாரர் திருப்பூர் இந்தியன் ஸ்டீல்ஸ் உரிமையாளர் எஸ். கே. மணி(எ) துரை ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
திருத் தேரோட்டத்திற்கு சுப்பா நாயக்கன் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, பாய்க்கார தெரு, உப்புக்காரர் தெரு, செட்டித் தெரு, கீழ அக்ரஹாரம், நடு அக்ரஹாரம், வடக்கு அக்ரஹாரம், தெற்கே அக்ரஹாரம், வளையல் கார தெரு, குடமுருட்டி வழி நடப்பு தெருவாசிகள், வைத்தீஸ்வரர் நற்பணி மன்றம், கைலாசநாதர் நற்பணி மன்றம், வீணா கான ஆஞ்சநேயர் நற்பணி மன்றம் ஆகியோர் முழு ஒத்துழைப்புடன் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஏராளமான முக்கியஸ்தர்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், பரம்பரை அறங்காவலர் வலங்கைமான் கே. நடராஜன்&சகோதரர்கள், சென்னை ஜி. சுப்பிரமணியன், வலங்கைமான் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் நற்பணி மன்ற அறக்கட்டளை ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.