திருநெல்வேலி மாவட்டம்
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பழையபேட்டையில் இருந்து கண்டியப்பேரி வழியாக ராமையன்பட்டி செல்லும் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது சாலை மிகவும் பழுதடைந்து வருகிறது
மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா என கண்டியப்பேரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் திருநெல்வேலி இணைக்கும் பிரதான சாலையான இந்த சாலையில் தினமும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் கனரக வாகனங்களும் கடந்து செல்கின்றன.
தற்போது அங்கு ஏற்பட்டுள்ள பள்ளமானது பொதுமக்களுக்கு பல்வேறு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது இரவு நேரங்களில் இச்சாலை கடக்க பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து சீர் செய்து தர வேண்டி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்