புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு தினம் கடைபிடிக்கப்பட்டது. நீங்கள் இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.
கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார்.அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா தேசிய குடற்புழு தினம் குறித்து பேசும் பொழுது 2015 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு 1-19 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் குடற்புழு நீக்கம் செய்வதற்காக, நாள் முழுவதும் அங்கன்வாடி மற்றும் பள்ளி சார்ந்த தேசிய குடற்புழு நீக்க தினத்தை அறிமுகப்படுத்தியது. அன்று முதல் தற்போது வரை குடற்புழு நீக்கம் பிடித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் தேதி குடற்புழு நீக்க தினமாக கடைபிடிக்கப்பட்டு மாத்திரைகள் வழங்கப்படுகிறது .
தேசிய குடற்புழு நீக்க தினத்தின் நோக்கங்களானமண் மூலம் பரவும் ஹெல்மின்த்ஸ் பரவலைக் குறைப்பது
குடல் புழுக்களின் சுமை மற்றும் தொடர்புடைய நோயைக் குறைப்பது என்பதாகும்.
குடலில் இருக்கும் புழுக்கள் பல வகைகளில் இருக்கும். அவற்றில் சில உருண்டை புழு, கொக்கி புழு, நூல் புழு, சாட்டை புழு, நாடா புழு.
குடல்புழுக்கள் நமக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துகளை உண்ணி, ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்தும். குடல்புழுக்கள் நுழைவதற்கான காரணங்கள் கைகளை சரியாகக் கழுவாமல் இருப்பது, மண்ணுடன் தொடர்பு கொள்ளுதல், அசுத்தமான உணவு மற்றும் பானங்களை உட்கொள்ளுதல், சுகாதாரமற்ற கழிப்பறைகள்.
குடல்புழுக்களை நீக்க ஆல்பெண்டைசல் மாத்திரை களை எடுத்துக்கொள்ள வேண்டும். குடற்புழுக்களை நீக்குவதன் மூலம் ரத்தசோகை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று பேசினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் நிவின், வெள்ளைச்சாமி, ஜெம்ம ராகினி சகாய ஹில்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.