கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மாங்குளம் கிராமத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு வந்தவர் மீது மின்தாக்கி பலியானார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்களம் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை மகன் சேகர் (வயது 55) என்பவர் வேப்பூர் வட்டம் மாங்குளம் கிராமத்தில் உள்ள தனது மாமன் ராஜகண்ணு மகன் ராஜவேல் என்பவரது திருமணத்தில் கலந்து கொள்ள மாங்குளம் கிராமத்திற்கு வந்தார்.
திருமண பந்தலில் நின்று கொண்டிருந்த சேகர் மீது மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தார் அருகில் நின்றவர்கள் சேகரை மீட்டு வேப்பூர் மருத்துவமனைக்கு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சேகர் இறந்துவிட்டார் என கூறியதை அடுத்த அவரது உடலை மீட்ட சிறுபாக்கம் போலீசார் சேகர் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.