சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் கிராமத்தில் அமைந்துள்ள அருருள்மிகு விஸ்வநாதர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில்களின் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தினருடன் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பெருந்தோட்டத்தில் பழமையான விசாலாட்சி சமேத விஸ்வநாதர் மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் கோவில்கள் அமைந்துள்ளன. சிதிலமடைந்த இந்த இரு கோவில்களில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4ம் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டு, 7ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து 9:30 மணிக்கு வேத மந்திரங்கள் ஓத இரண்டு கோவில்களில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது 10 மணிக்கு மூலாலய மகா அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். . கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் சுந்தரேசய்யர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.இந்த நிகழ்ச்சியில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது குடும்பத்தினருடன் கும்பாபிஷேக திருவிழாவில் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டார்.
அஸ்வின் தாயார் சொந்த ஊரான பெருந்தொட்ட கிராமத்தில் உறவினுடன் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை கண்டு களித்தார் மேலும் அவர்களின் பரம்பரை கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.