மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் 4% சதவீத இட ஒதுக்கீடை அமல்படுத்த வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கம் எதிர்பார்ப்பு.
கந்தர்வக்கோட்டை
மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெ.தங்கம் வழிக்காட்டுதலின் படி மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்
கடந்த 2006-2011 முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பொற்கால ஆட்சியில் தமிழ்நாட்டில் ஊனமுற்றோர் அலுவலகம் என்பதை மாற்றுத்திறனாளி அலுவலகம் என்பதை மாற்றி மாற்று திறனாளிகளுக்கு என்று தனியாக ஒரு துறையை உருவாக்கி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தன்னுடைய நேரடி பார்வையில் வைத்திருந்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு, போக்குவரத்தில் 75 சதவீதம் மானியம், உதவித்தொகை இரு மடங்கு உயர்வு, உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை
திராவிட முன்னேற்றக் கழக பொற்கால ஆட்சியில் தான் செயல்படுத்தி மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி அவர்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைவு கூறுகிறோம்.
கலைஞர் வழியில் சமூக நீதி ஆட்சி நடத்தும் திராவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் மாற்றுத்திறனாளி நலத்துறையை தன்னுடைய நேரடி பார்வையில் வைத்துள்ளார்.
திராவிட மாடல் ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் உதவித்தொகை, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரு மடங்கு உயர்வு, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கலைஞர் வழியில் வழங்கி பொற்கால ஆட்சியை நடத்தி வருகிறார்.
இவ்வாறு பொற்கால ஆட்சி நடத்திவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டுள்ளோம். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணியில் பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க
உச்ச நீதிமன்றம் 2021-ல் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம், 2016-ன்படி, அரசு அவ்வப்போது வெளியிடும் அறிவுறுத்தல்களின்படி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
இந்திய நாடாளுமன்றத்தில் 1995-ம் ஆண்டு இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சட்டம் பிரிவு 34-இன் படி மாற்றுத்திறனாளிகளின் சம உரிமை பாதுகாக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்த வழக்கில் 2021-ல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இறுதித் தீர்ப்பை மூன்று நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் வழங்கியது. அதன்படி ஒன்றிய அரசு பணியிலுள்ள மாற்றுத் திறனாளி அலுவலர்களுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இத்தீர்ப்பை ஏற்று ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
சமூக அக்கறையுடன் வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழகத்தில் சமூக நீதியை காக்கும் திராவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையோடு காத்துக் கொண்டுள்ளோம். தற்போதும் உயர்நீதிமன்றம் மாற்று திறனாளிகளுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வேண்டும் என தீர்ப்பு வெளிவந்துள்ளதாக அறிகிறோம்..
சமூகநீதி காக்கும் முதல்வர் திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாத்தையும் ஒவ்வொரு நாளும் வழங்கிக் கொண்டிருக்கின்ற எங்களுடைய முதல்வர் தமிழ்நாடு இந்தியாவிற்கே முதன்மை மாநிலமாகவும், சமூகநீதி மாநிலமாக திராவிட மாடல் ஆட்சி நடந்தி கொண்டிருக்கும் முதல்வர் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம். மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.