பெரம்பலூர்.பிப்.09. அதிமுகவின் பொது செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க,பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் ஆலோசனைப்படி,வேப்பூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கே எஸ் செல்வமணி தலைமையில் அகரம்சீகூர் அய்யனார் கோவிலில் கழகத்தின் இளைஞர் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்படிவம் இளம் தலைமுறை விளையாட்டு அணியின் , உறுப்பினர் படிவம் (மற்றும் ) வேப்பூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய அணிகளுக்கு. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டமும்’ உறுப்பினர் படிவம் எவ்வாறு பூர்த்தி செய்வது என்ற ஆலோசனை வழங்கினார்கள்
இந்த நிகழ்வில் மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட,ஒன்றிய அணி செயலாளர், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்கள்.