இராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு மேனேஜிங் டிரஸ்டி அருணா தேவி முன்னிலை வகிக்க தாளாளர் .திருப்பதி செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் அவர்கள் உலக மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், அரசுப் பொதுத்தேர்வில் 593/600 மதிப்பெண் பெற்று விருதுநகர் மாவட்டத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்த மாணவர் மணீஷ் மற்றும் அரசுப் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்றிடம் வகித்த மாணவர்கள், பாடவாரியாக சதம் பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் , கலைஞர் தொலைக்காட்சியின் தமிழோடு விளையாடு நிகழ்ச்சியில் கால் இறுதிக்குத் தகுதி பெற்ற மாணவிகள் மற்றும் வழிகாட்டி ஆசிரியை சித்ரா ஆகியோருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி மரக்கன்று வழங்கும் நிகழ்வினை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான . அரசகுமார் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டு,கல்வியில் சாதனை பெற்ற மாணவர்கள், 100% வருகைப்பதிவிற்கான மாணவர்கள் மற்றும் மாநில,தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ம் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் அப்துல்கலாமின் சிறப்பு , நீரின் இன்றியமையாமை, இராணுவச்சிறப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட நடனங்கள், வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரத்தை வெளிப்படுத்தும் நாடகம் , விவசாயத்தை சிறப்பிக்கும் மௌனமொழி நாடகம் , தொழில் நுட்ப உலகில் மாணவர்களின் பொறுப்பு பற்றி மாணவர் நரேஷின் பேச்சு , AI நண்பனா? எதிரியா? குறித்து மாணவி ஷைனியின் உரை பார்வையாளர்களைக் கவர்ந்தன.. பள்ளியின் ஆண்டறிக்கையினை முதல்வர் திருமலைராஜன் வழங்கினார். நிர்வாக அதிகாரி பானுப்பிரியா, வரவேற்புரை வழங்க கல்வி ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன், நன்றியுரை வழங்கினார்.