மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள கலையரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆலோசனைக் கூட்டம் மற்றும் அரசியல் அங்கீகாரம் பெற்றுத்தந்த கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி அமைப்பாளர் மணிமொழியான், தலைமை தாங்கினார் மேற்கு மாவட்ட செயலாளர் ஊர்சேரி சிந்தனைவளவன், முன்னிலை வகித்தார் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்கள் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, மற்றும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, மாநில அமைப்பு செயலாளர் எல்லாளன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வஅரசு, ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியதுடன் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் தெரிவித்தனர்
தொடர்ந்து நிர்வாகிகள் பேசுகையில் கட்சியின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களது தொகுதியில் வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கும் நன்றி தெரிவித்தனர். அரசியல் அங்கீகாரம் பெற்றுத்தந்த தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் வரும் தேர்தல்களில் கிளைகள் அனைத்திலும் தொடர்ந்து மக்கள் பணி செய்து நமது சின்னமான பானை சின்னத்தை வெற்றி பெறச் செய்வோம் என்று தெரிவித்துக் கொண்டனர்.
கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிபிஐ மாநில கட்டுப்பாட்டு குழு தோழர் காளிதாஸ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உமா மகேஸ்வரன், சிபிஐ ஒன்றிய செயலாளர் குமரேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் காமராசு தமிழன், மற்றும்
புளியம்மாள்,தன்மானசெல்வி, நிர்வாகிகள் தமிழழகன், பாலமுருகன், ராஜாமணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் முடிவில் பேரூர் செயலாளர்கள் ராமதாசு, சேகர், நன்றி தெரிவித்தனர்.