தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் வெள்ளிப்பதக்கம் தமிழக அணியில் விளையாடிய தென்காசி மாணவனுக்கு பாராட்டு
தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக அணியின் சார்பில் விளையாடிய தென்காசி மாணவனை தென்காசி நகராட்சி தலைவர் ஆர்.சாதிர் கைத்தறி ஆடை அணிவித்து பாராட்டினார்.
69 வது தேசிய பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டியில் தமிழக அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்த அணியில் விளையாடிய தென்காசியை சேர்ந்த மாணவன் லஷ்வந்த் பாலாவை தென்காசி நகராட்சி தலைவரும், நகர திமுக செயலாளருமான ஆர்.சாதிர் நேரில் அழைத்து கைத்தறி ஆடை மற்றும் பதக்கம் அணிவித்து பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகர திமுக பொருளாளர் அ.சேக்பரீத், மாணவரணி மைதீன், மாவட்ட பிரதிநிதி இசக்கிமுத்து மற்றும் பூப்பந்தாட்ட கழகம் தலைவர் ஜெயராமன், செயலாளர் கார்த்தி, பொருளாளர் வைகுண்டசாமி பயிற்சியாளர் கந்தன், மேலாளர் காதர், முகமது ஷாசிப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.